சென்னையில் அதிகரித்து வரும் டெங்கு!

0

தமிழகத்தில் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதற்கமைய சென்னையில் கடந்த 13 நாட்களில் 11 பேருக்கு இந்த டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த டெங்கு நோயை பரப்பும் நுளம்புகளை ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதாக தமிழக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

மேலும் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டால் மாவட்டம் தோறும் டெங்கு நுளம்பு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply