தடுப்பூசி பெற்றவர்களில் 50க்கும் அதிகமானோர் வைத்தியசாலையில்!

0

நாடு பூராவும் தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கையில் தடுப்பூசி பெற்ற 50க்கும் அதிகமான ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் நேற்றையதினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய அம்பாந்தோட்டை வீரகெட்டிய பகுதியிலுள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஊழியர்களுக்கு இவ்வாறு சைனோபார்ம் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

இதனையடுத்து தலைச்சுற்று மற்றும் தலைவலி ஏற்பட்ட 50 இற்கும் அதிகமானவர்கள் வீரகெட்டிய மருத்துவமனையில் நேற்றையத்தினம் அனுமதிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது

Leave a Reply