எதிர்வரும் வாரங்களில் கோதுமை மா தயாரிப்பிலான உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கரிப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது என வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ளார்.
இதற்கமைய அவர் கொழும்பில் நேற்று தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே குறித்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் குறித்த பொருட்களின் விலை உயரும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதன் ஒரு பகுதியாக அதி குறைந்த விலையில் நூடீல்ஸ், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



