கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 45 ஆயிரத்து 892 பேர் புதிய கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இந்தியாவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து 9 ஆயிரத்து 557 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் கொவிட் தொற்று பாதிப்பு காரணத்தினால் ஒரே நாளில் மாத்திரம் 817 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது நேற்றுடன் ஒப்பிடும்போது சற்று குறைவாக காணப்படுகிறது.
இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றுக்குளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 5 ஆயிரத்து 28 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் குறித்த தொற்று பாதிப்பிலிருந்து கடந்த 24 மணி நேரத்திற்குள் 44,291 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதற்கமைய இதுவரையில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 98 லட்சத்து 43 ஆயிரத்து 825 அதிகரித்துள்ளது.
மேலும் கொவிட் தொற்றுக்குள்ளாகி தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 60 ஆயிரத்து 704 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது



