இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்.

0

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க கூட்டணி அரசு, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அதிகாரத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளில் ஒருமுறை கூட மத்திய மந்திரிசபையினால் எந்தவிதமான மாற்றமோ விரிவாக்கமோ இடம்பெறவில்லை.

இதற்கமைய மத்திய மந்திரி சபையில் மாற்றங்களை ஏற்படுத்த வசதியாக பனிரெண்டு மந்திரிகள் நேற்றைய தினம் இராஜினாமா செய்துள்ளனர்.

இந்த 12 மாதிரிகளின் இராஜினாமாக்களை பிரதமர் மோடியின் பரிந்துரையின் பெயரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.

அத்துடன் மத்திய மந்திரி சபையில் புதிய மந்திரிகளின் பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்றது.

இவற்றில் புதிதாக 43 மந்திரிகள் பதவியேற்றுள்ளனர்.

இவ்வாறு பதவியை வகித்தவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில், இன்றைய தினம் மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டமும் பின்னர் ஏழு மணிக்கு அமைச்சர்கள் கூட்டமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply