Zoom தொழில்நுட்பத்திற்காக பெக்கேஜ் ஒன்று வழங்குவதாக கூறி பாடசாலை மாணவர்களின் கையடக்க தொலைபேசி இலக்கங்களை பெற்று மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்ட வந்த நபரொருவர் குற்ற விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த நபர் மாத்தறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் இந்த இளைஞன் இணையதளம் மூலமாக மாணவிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அதிபர் மாத்தறை குற்ற விசாரணைப் பிரிவிடம் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் 28 வயதினையுடைய தமுத்தேகம பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் இந்த நபர் பிரதான தரப்பு தொலைபேசி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்த்து தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த சந்தேக நபர் கையடக்கத் தொலைபேசி ஊடாக மாணவிகளின் புகைப்படங்களை பெற்றுக் கொண்டு அவர்களை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் இன்று மாத்தறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.



