உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்.

0

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய யாழ்ப்பாணம் ,மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் இவ்வாறு தனிமைப் படுத்தப் பட்டுள்ளன.

இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் ஊர் காவல்துறை காவல்துறை அதிகாரி பிரிவிற்குட்பட்ட நாரந்தனை வடமேல் பகுதியான தம்படி பிரதேசமும்

அவ்வாறு மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை காவல்துறை அதிகாரி பிரிவிற்குட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவுகளும்

அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட காவல்துறை அதிகாரி பிரிவின் பூஹபுகொட கிழக்கு கிராம சேவகர் பிரிவின் மலபடவத்த ஆகிய கிராமசேவகர் பிரிவுகளே இவ்வாறு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளது.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் காவல் துறை அதிகாரி பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் 2 கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply