கேரளா பகுதியில் வைத்து இலங்கையர்கள் மூவர் அதிரடிக் கைது.

0

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் சம்பவம் மற்றும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில்
கேரளா, அங்கமாலி பகுதியில் வைத்து இலங்கையர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த நபர்கள் இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் போலி அடையாள அட்டைகளுடன் கேரளா அங்கமாலி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தங்கியிருந்ததாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும் கேரளாவில் இடம்பெற்ற பல குற்றச் செயல்களுடன் இவர்கள் தொடர்புடையவர்கள் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Leave a Reply