யாழ்-அல்லைப்பிட்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்றைய தினம் பிறந்தநாள் நிகழ்வினை கொண்டாடிய 19 பேர் அதே விடுதியில் வைத்து சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கமைய யாழ்ப்பாணத்தில் இருந்து அல்லைப்பிட்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு நண்பர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு 19 பேர் சென்றிருந்தனர்.
இதனை அறிந்த அந்தப் பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர், ஊர்காவற்றுறைகாவற்துறையினருடன் சென்று தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக 19 பேரையும் அந்த விடுதியிலேயே சுயதனிமைப்படுத்தினார்.
இனை தொடர்ந்து, நட்சத்திர விடுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.,
மேலும் இவ்வாறு சுயதனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.



