யாழில் இன்றைய தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதற்கமைய உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்ததை தொடர்ந்து தங்கத்தின் விலையிலும் தொடர்ச்சியாக அதிகரிப்பு உலகளவில் பதிவாகி வருகிறது.
கொவிட் வைரஸ் பரவலால் சர்வதேச பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை காணப்படுவதுடன் உலகப் பொருளாதாரமும் நாளுக்கு நாள் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.
இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் முதலீடு செய்து வரும் நிலையில் தங்கத்தின் தேவை உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருவதால் உலக சந்தையில் தங்கத்தின் விலையில் நிலையற்ற தன்மை நீடித்து வருகின்றது.
இந்நிலையில் இலங்கையில் அதிலும் குறிப்பாக தமிழர் தாயகப்பகுதியான யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை மேலும் 3500 ரூபாவால் அதிகரித்து ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாவாக விற்பனையாகியுள்ளது.
அதன்படி 24 கரட் தங்கத்தின் விலை (ஒரு பவுண்) – ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாவாக உள்ளது. அத்துடன் 22 கரட் தங்கத்தின் விலை (ஒரு பவுண்) – ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.



