
மகாவிஷ்ணுவுடன் இருக்கும் மகாலட்சுமி எட்டு வகையான செல்வங்களை வழங்கும் தெய்வமாகக் கருதப்படுகிறாள். ஒவ்வொரு செல்வத்திற்கும் உரியவராய், தனித்தனியாக எட்டுத் தோற்றங்களில் அருளும் மகாலட்சுமியே, ‘அஷ்டலட்சுமி’ எனக் கொண்டாடப்படுகிறாள். ‘அஷ்டம்’ எனும் வடமொழிச் சொல்லுக்கு ‘எட்டு’ என்று பொருள். எட்டு லட்சுமிகளின் தோற்றப் பெயர்களும், அவர்களால் கிடைக்கும் பலன்களும் வருமாறு:
ஆதிலட்சுமி – நோய்களற்ற உடல் நலம் தருதல்

தான்யலட்சுமி – பசியின்றி இருக்கச் செய்தல்
வீரலட்சுமி – இடர்ப்பாடுகளை சமாளிக்கும் துணிவைத் தருதல்.
கஜலட்சுமி – வாழ்விற்குத் தேவையான நற்பேறுகளை வழங்குதல்.
சந்தானலட்சுமி – குழந்தைப்பேறு தருதல்.
விஜயலட்சுமி – செய்யும் காரியங்களில் வெற்றி பெறச் செய்தல்.
வித்யாலட்சுமி – கல்வி மற்றும் அறிவு அளித்தல்.
தனலட்சுமி – செல்வம் பெருகச் செய்தல்.- Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
