
சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை’ என்பது பழமொழி. ஆரோக்கியத்தைச் சீராக்குவது சுக்கு. அமைதியான வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பது சுப்ரமணியர் வழிபாடு. அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்கு எண்ணற்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவரது ஒவ்வொரு பெயருக்குமே அதற்கான காரணங்கள் இருக்கின்றன. அவற்றை பார்க்கலாம்.
சுவாமிநாதன் – தந்தைக்கு உபதேசம் செய்தவன்
கார்த்திகேயன் – கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்
சேவற்கொடியோன் – சேவலைக் கொடியாகக் கொண்டவன்
சரவணபவன் – சரவணப் பொய்கையில் தோன்றியவன்
காங்கேயன் – கங்கையில் வளர்ந்தவன்

மயில்வாகனன் – மயிலை வாகனமாகக் கொண்டவன்
சுப்ரமணியன் – பிரம்மத்தில் உயர்ந்தவன்
சண்முகன் – ஆறுமுகம் கொண்டவன்
வேலவன் – வேலைக் கையில் கொண்டவன்- Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
