உயர்ந்த பதவி கிடைக்க அருளும் தமிழ் ஸ்லோகம்..!

0

அன்னை மீனாட்சியின் சரிதத்தைப் போற்றி, அவளின் திருப்பாதக் கமலங்களைத் துதித்துப் போற்றச் சொல்லும் மிக அற்புதமான பாடலொன்று திருவிளையாடற் புராணத்தில் உண்டு.

செழியர் பிரான் திருமகளாய் கலைபயின்று
முடிபுனைந்து செங்கோலோச்சி
முழுதுலகும் செயங்கொண்டு திறைகொண்டு
நந்திகண முனைப்போர் சாய்த்துத்
தொழுகணவற்கு அணிமணி மாலிகைச் சூட்டித்
தன்மகுடம் சூட்டிச் செல்வந்த்
தழைவுறு தண் அரசளித்த பெண்ணரசி
அடிக்கமலம் தலைமேல் வைப்பாம்

மதுரை மீனாட்சியம்மன் அரசுகளுக்கெல்லாம் பேரரசியாகத் திகழ்பவள் எனப் போற்றுகின்றன ஞானநூல்கள். மேற்காணும் பாடலை அனுதினமும் பாடி, அன்னை மீனாட்சியை வணங்கி வழிபட்டு வந்தால், உயர்ந்ததிலும் உயர்ந்த பதவிகளும், பொறுப்பு களும் வாய்க்கும்; கஷ்டங்கள் நீங்கி நமது நல்ல விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply