27 ஞாயிற்றுக்கிழமைகள் சூரியனை வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

0

27 ஞாயிற்றுக்கிழமைகள் சூரியனை இந்த ஸ்லோகத்தை கூறி வழிபட்டு வந்தால் முதுமை மற்றும் பிற காரணங்களால் கண்களில் பார்வை திறன் குறைவதை தடுத்து கண்களின் ஒளி காக்கப்படும்.

சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் போற்றும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்.

உலகிற்கு ஒளியை தரும் சூரிய பகவானுக்குரிய இந்த தமிழ் ஸ்லோகத்தை ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து நீராடிய பின்பு, சூரியன் உதிக்கின்ற நேரத்தில் அச்சூரியனை தரிசித்தவாறே இந்த ஸ்லோகத்தை 9 அல்லது 27 முறை கூறி ஜெபிக்க வேண்டும். இப்படி 27 ஞாயிற்றுக்கிழமைகள் சூரியனை மேற்கூறிய இந்த ஸ்லோகத்தை கூறி வழிபட்டு வந்தால் முதுமை மற்றும் பிற காரணங்களால் கண்களில் பார்வை திறன் குறைவதை தடுத்து கண்களின் ஒளி காக்கப்படும். நீண்ட நாட்களாக உடலை வருத்திக்கொண்டிருக்கும் ரோகங்கள் நீங்கும். உடல் மற்றும் மனம் உறுதிபெறும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply