சிவனை வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும்..!

0

மனிதர்களின் வாழ்வில் ஏற்படும் துன்பங்களுக்கு காரணம் நவக்கிரகங்கள்தான் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. மூன்று கிரகங்கள் தீய பலன்களை வழங்குவதில் வலிமை பெற்றவை. அவற்றின் பெயர்களை கேட்டாலே பாதிப்படைந்தவர்களுக்கு அச்சம் உண்டாகும். ராகு, கேது, சனி பகவான் இம்மூன்றும் தான் இப்பெருமைக்குரியவை. அதிலும் இவற்றில் முதன் மையானது சனி பகவான் தான்.

ஆளானப்பட்ட சிவனையே பிடித்ததால் சனி பகவான் பிடித்ததால் சனீஸ் வரன் என்னும் பெயரைப் பெற்றார். வாழ்வில் சனீஸ்வரனை வணங்காமல் இருக்க முடியாது. யாரை விட்டது சனி என்பதன் மூலம் பனிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் தங்கள் ராசிக்கேற்ப வாழ்வில் (மூன்று முறை) ஏழரை சனி பாதிப்புகளைச் சந்தித்தே ஆக வேண்டும்.

ஏழரைச் சனி பிடிக்கும் காலத்தை மங்குசனி, தங்குசனி, பொங்குசனி என்று மூன்றாக பிரிக்கலாம். சனி தோஷம் பிடித்தாலே எடுத்த காரியம் ஒன்று கூட உருப்படாது என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். இன்னல் என்பது இதுதான் என்று சொல்ல முடியாமல் எல்லாவகையிலும் தொடர்ந்து துன்பங் களை அனுபவிக்க நேரிடும். குடும்பத்தில் பிரச்னை, திருமணத்தடை, தொழி லில் வளர்ச்சியின்மை, பொருளாதார நெருக்கடி, விரக்தி, வேலை வாய்ப் பின்மை, பண முடக்கம் என்று எந்தப்பக்கம் திரும்பினாலும் துன்பங்கள் மட் டுமே தொடரும்.

சனீஸ்வர தோஷத்தின் பிடியிலிருக்கும் பக்தர்கள் மனமுருகி சனிபகவானை வழிபட்டு தேவையான பரிகாரங்களைச் செய்தால் சோதனை கள் குறையும். ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்ட சிவபக்தர்கள் சிவனிடம் அப யம் கேட்கும் போது சனீஸ்வரனின் பாதிப்புகள் ஓரளவு குறையும். நவக்கிரகங் களைச் சுற்றி சனீஸ்வர பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றலாம். சனி பகவானின் வாகனமான தினசரி காக்கைக்கு உணவு இடுவது நல்லது. ஏழைகளுக்கு கறுப்பு ஆடைகளை தானமாக கொடுப்பது நல்லது.

ஜென்ம சனி ஏற்படும் போது சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றையும் சேர்த்து தீபம் ஏற்ற வேண்டும். சிவபெரு மானுக்கு பசும்பாலால் அபிஷேகம் செய்யலாம். சனிப்பிரதோஷ காலத்தில் விரதம் இருப்பது நல்லது.

குடும்பச்சனி, பாதகச்சனியில் சஞ்சரிக்கும் போது வெள்ளைத்துணியில் எள்சிறிது முடிந்து எள் தீபம் ஏற்ற வேண்டும். சனிபகவானுக்கு எள் உணவு செய்து வழிபட்டு இயலாதவர்களுக்கு தான, தருமம் செய்வது நல்லது.

கண்டச்சனி, அஷ்டமச்சனி என எந்த தோஷமாக இருந்தாலும் சனிக்கிழமை தோறும் நவக்கிரகங்களைச் சுற்றி சனீஸ்வர பகவானுக்கு எள் தீபமேற்றி சனிபகவானை வழிபட்டால் தோஷங்கள் அகலாது என்றாலும் துன்பங்கள் நிச்சயம் பெருமளவு குறையும் என்பது ஐதிகம். – Source: newstm


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply