
புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் திருபுவனை அருகே உள்ளது திருவாண்டார்கோவில். நடுநாட்டைச் சேர்ந்த திருவாண்டார்கோவில் திருவடுகூர், திருவாறையுடை, திருவையாறு திருபுவனை, மாதேவி, சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது.
சோழர்கால கோயில்:
1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இத்திருக்கோவில் முதலாம் பராந்தக சோழ மன்னன் காலத்தில் கிபி 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பரகேசரி என்னும் உத்தம சோழன் இராசகேசரி என்னும் முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன் போன்ற சோழ மன்னர்களாலும், விஜயநகர அரசர் விருப்பண்ணர், வீரபுக்கர், சாளுவ நரசிம்மன், கிருஷ்ணதேவராயர், அச்சுதராயர் என்னும் விஜயநகர் மன்னர்களாலும் ராஷ்டிரகூடர், கன்னர், தேவர் மூன்றாம் கிருஷ்ணராலும் பராமரிக்கப்பட்டு, புனரமைப்பு செய்யப்பட்ட சிறப்பினை உடையதாகும். திருவடுகூர் என்று திருஞானசம்மந்தரால் பாடப்பெற்ற பெருமையும் இதற்கு உண்டு.

கும்பாபிஷேகம்:
வடுகபைரவர் என்னும் பிரம்மன் வழிபட்ட திருக்கோயில் என்ற பெருமையும் இந்த கோவிலுக்கு உண்டு இந்த கோயிலில் அருள்பாலிக்கும் இறைவன் அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் என்றும், பரமசுவாமி என்றும், வடுகூர் நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி திரிபுரசுந்தரி என்றும், வடுகையர் கன்னி என்றும் அழைக்கப்படுகிறார். இந்த திருக்கோவிலுக்கு கடந்த 1985ஆண்டும் 1991ஆண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து 27 ஆண்டுகளுக்கு பிறகு 30.03.2018 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. – Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
