மஹாலட்சுமியின் கடாட்சம் கிடைக்க செய்ய வேண்டிய மங்கள வழிபாடு..!

0

லட்சுமியின் அருள் கிடைக்க என்ன வழிபாடு செய்ய வேண்டும் என்பதை கீழே விரிவாக பார்க்கலாம். அதிகாலையில் வீட்டின் முன்பு சாணம் அல்லது தண்ணீர் தெளித்துக் கோலமிடுவதன் மூலம் லட்சுமி கடாட்சம் உண்டாகும். காலை எழுந்தவுடன் பசுவின் முகத்தில் விழிப்பது அல்லது பசு வடிவ பொம்மைகளை படுக்கையறையில் வைத்துக் கொண்டு அதன் முகத்தில் விழிக்கலாம். வெள்ளிக்கிழமை தோறும் ஐந்துமுக விளக்கேற்றுவது உகந்தது. பவுர்ணமி அன்று விஷ்ணுவிற்கு பழ வகைகள் நைவேத்தியம் செய்து அதை சாப்பிடுவதும் நல்லது. வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பது மட்டுமல்லாமல், சினத்தை தவிர்ப்பதன் மூலமும் பணத்தைக் கொடுக்கும் லட்சுமியை இல்லத்திற்கு வரவழைத்துக் கொள்ளலாம்.

மங்கலம் தரும் மஞ்சள் ஆடை

திருமணப் பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள் தான். இதற்கு காரணம் அது ஒரு மங்கலப் பொருளாகக் கருதப்படுகிறது. எந்தப் பூஜையை நாம் செய்தாலும் மஞ்சள் பிள்ளையாரை வைத்து மலரும், குங்குமமும் வைத்துப் பூஜை செய்வது வழக்கம். இலையில் விழுந்தால் அரிசி. தலையில் விழுந்தால் அட்சதை. முனை முறியாத அரிசியில் மஞ்சள் தடவித் தூவுவது தான் அட்சதை ஆகும். விரத காலங்களில் மஞ்சள் ஆடை அணிந்தால் குடும்பத்தில் மங்கலங்கள் நடைபெறும். ஆரோக்கியம் சீராகும். மஞ்சள் அரைத்துத்தடவி பல நோய்கள் குணமாவதை மருத்துவர்கள் எடுத்துரைப்பர். அதற்காக முகத்தில் மஞ்சள்தடவி முன்பு பெண்கள் குளிப்பது வழக்கம். குரு தட்சிணாமூர்த்திக்கு உகந்த வஸ்திரம் மஞ்சள் நிற ஆடைதான். – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply