டி.ராஜேந்தர் வீட்டில் டும் டும் டும்! தடபுடலாக நடக்கும் ஏற்பாடு.!

0

தமிழ் சினிமாவால் 40 வயதை நெருங்கியும் திருமணம் செய்து கொள்ளாமல் ஆர்யா, விஷால், சிம்பு என ஒரு சிலர் சிங்கிளாகவே வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களில் ஒரு வழியாக ஆர்யாவுக்கும், விஷாலுக்கும் திருமணம் உறுதியாகி விட்டது. சிம்பு திருமணத்தை பற்றி எந்தவொரு தகவலும் வந்த பாடில்லை. பெண் தேடுகிறோம், பெண் தேடுகிறோம் என கூறி அவரது குடும்பத்தார்கள் தேடி கொண்டே இருக்கிறார்கள்.

இந்நிலையில் சிம்புவின் தம்பி குறளரசனுக்கு வரும் ஏப்ரல் 26-ம் தேதி உறவினர்கள் மத்தியில் மிகவும் சிம்பிளாக திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சமீபத்தில் குறளரசன் முஸ்லிமாக மதம் மாறியதும் இந்த திருமணத்திற்காக தான் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. Source: kalakkalcinema


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply