
வரதராஜப் பெருமாள் கோயில் வைணவர்களின் நம்பிக்கைப்படி, திருவரங்கம் மற்றும் திருவேங்கடத்துக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த தலம் ஆகும். இது சென்னையை அடுத்த கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. இது வைணவ திவ்ய தேசங்களுள் முப்பதோராவது திவ்ய தேசமாகும்.
இக்கோயிலை முதலில் நிறுவியது யார் என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை. எனினும் கி பி 1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்காக விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தினர் என்பதும், பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன என்பதும் கல்வெட்டுக்கள் தரும் செய்திகள்.

தமிழர்களின் வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயிலைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
சோழர்களின் வீழ்ச்சி
சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்.- Source: nativeplanet
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
