
தெய்வங்களின் திருநாமங்களை மனதிற்குள் சொன்னாலே இறைவனது அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் வரவிருக்கும் ஆபத்தை உள்மனது எச்சரிக்கும் போதும் அறியாமல் பின்தொடரும் பில்லி சூனிய ஆபத்துக்களிலிலிருந்தும் விடுபட பேருண்டா நித்யாவை சரணடையுங்கள்.
அண்ட சராசரம் முழுக்க ஆட்சி செய்யும் பேருண்டா நித்யா. அப்படியான ஆபத்துகளை நீக்குகிறாள் அகிலத்துக்கே ஆதிகாரணியாக விளங்குபவள் இவள். அநேக கோடி அண்டங்களை உருவாக்கியதால் இவள் அநேக கோடி பிரமாண்ட ஜனனீ என்றும் பக்தியோடு அழைக்கப்படுகிறாள்.
நீங்கள் பிறந்ததேதிக்கு உரிய திதி நித்யாதேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதாம்பிகையுடன் ஸ்ரீ சக்கரம் வைத்து கொடுத்திருக்கும் மூலமந் திரத்தை ஒரு வருடம் சொல்லி வந்தால் திதி சூனியம் நீங்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

நீங்கள் சதுர்த்தி திதியில் பிறந்திருந் தால் உங்களுக்குரிய திதி நித்யா தேவி பேருண்டா நித்யா. சுக்லபக்ஷ் சதுர்த்தி மற்றும் கிருஷ்ண பக்ஷ துவாதசி அன்று இவளை வழிபடுங்கள்.
சதுர்த்தி திதியன்று வீட்டில் விளக்கேற்றி பேருண்டா நித்யாவை வணங்கினால் சகல தெய்வங்களையும் வணங்கிய பலனை கொடுக்கும். இவளை புன்னகையுடன் பூஜித்து வழிபட வேண்டும் என்பதே ஐதிகம்.
பேருண்டா நித்யானி
திதி நித்யா தேவிகளின் நான்காம் இடத்தை அலங்கரிப்பவள். தங்கத்தை உருக்கியது போன்ற தேகத்தை உடையவள். கேடயம், கட்கம், கதை, வஜ்ராயுதம், வில் அம்பு ஏந்தி ஆறு திருக்கரங்களுடன் முக்கண்கள் தரித்து அகிலத்தைக் காக்கிறாள். பட்டாடை இவளது மேனியை அலங்கரிக்க, மேன்மையான ஆபரணங்கள் தேவியின் அழகுக்கு அழகூட்டுகின்றன. இவளது திருவடித் தாமரையைத் தாங்கும் பேறை தாமரை மலர் பெற்றுள்ளது.
மூலமந்திரம்
ஓம் பேருண்டாயை வித்மஹே
விஷஹராயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்- Source: newstm
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
