வெற்றி கிடைக்க துர்க்கை அம்மனுக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்

0

துர்க்கையை நினைத்த மாத்திரத்திலேயே துஷ்ட கிரகங்கள் பயந்து ஓடுகின்றன. இந்த மந்திரத்தை ஜபம் செய்பவர்கள் எந்த செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிட்டும்.

கிரக தோஷங்கள் விலக துர்க்கை ஸ்லோகம்
பிப்ரணா ஸூலபாணாஸ்யரிஸதரகதா சாபபாஸாந் கராப்ஜை:
மேகஸ்யாமா கிரீடோல்லிகிதஜலதரா பீஷணா பூஷணாட்யா
ஸிம்ஹஸ்கந்தாதிரூடா சதஸ்ருபிரஸிகேடாந்விதாபி: பரீதா

கந்யாபிர்பிந்நதைத்யா பவது பவபய தவம்ஸிநீ ஸூலிநி வ:
-சூலினி துர்க்கா ஸ்லோகம்

பொதுப் பொருள்:

சூலினி துர்க்காதேவியை வர்ணிக்கும் ஸ்லோகம் இது. பேரொளியோடு திகழும் திரிசூலத்தைக் கையில் தாங்கியவள்; எதிரிகளை அழிப்பதில் நிகரற்றவள். இரு புறங்களிலும் கத்தி, கேடயம் ஏந்திய தோழிகள் காவலிருக்க கம்பீரமாக கோலோச்சுபவள். இவளை நினைத்த மாத்திரத்திலேயே துஷ்ட கிரகங்கள் பயந்து ஓடுகின்றன. இந்த மந்திரத்தை ஜபம் செய்பவர்கள் எந்த செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிட்டும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply