
அனைவருக்கும் மனதில் ஏதாவது மனக்கசப்புகள் இருக்கத்தான் செய்யும்.
வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் மனசங்கடம்,படிக்கும் குழந்தைகளுக்கு படிப்பில் சங்கடம்,தொழில் செய்பவர்களுக்கு தொழில் முன்னேறவில்லையே என்று சங்கடம்,திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகவில்லையே என்று சங்கடம்,திருமணம் ஆனவர்களுக்கு திருமண வாழ்க்கையில் சங்கடம்,குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை இல்லையே என்று சங்கடம்,குழந்தை இருப்பவர்களுக்கு குழந்தை அடம்பிடிப்பதால் சங்கடம்.
இப்படி மனக்கசப்புகளும்,மனசங்கடங்களும் ஏதாவது ஒரு உருவத்தில் வந்து விடுகிறது.ஆகவே இந்த மாதிரி பிரச்சனைகளை சமாளிப்பதற்கு ,மனநிம்மதிக்கும் மனதைரியம் வேண்டும்.
ஆஞ்சநேயர் வழிபாடு மூலம் இந்த சங்கடங்களை போக்கி மன தைரியம் பெறலாம்.

ஆஞ்சநேயர் புகைப்படத்தின் உள்ளே முழுவதும் ‘ஸ்ரீ ராம ஜெயம்’என்னும் உச்சரிப்பை பக்தியோடு எழுத வேண்டும்.
அதன் பிறகு ஆஞ்சநேயரின் வலது பாதத்தில் ஆரம்பித்து சந்தம் மற்றும் குங்குமம் வைத்து பொட்டு வைக்க வேண்டும்.அப்படி பொட்டு வைக்கும் பொழுது ராம ஜெயம் உச்சரிக்க வேண்டும்.
இப்படியே வலது கால் பாதத்தில் ஆரபித்து உடம்பு முழுவதும்,அதன் பின் வால் என் வைத்து கொண்டே வந்து இடது கால் பாதத்தில் கொண்டு முடிக்க வேண்டும்.
அதன் பின் ஒரு தாம்பூலத்தில் அந்த பூஜை செய்த புகைப்படத்தை வைத்து,ஒரு தீபத்தை ஏற்றி ஸ்வாமியின் பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதன் மூலம் மனதில் உள்ள கஷ்டம் அனைத்தும் பறந்து போகும்.மனதில் நிம்மதி வந்து குடிபுகும். – Source: timestamilnews
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
