இத்துதியை தேவியை மனதில் நினைத்து 27 முறை கூறி துதித்து வந்தால் வீட்டில் பணவரவு, தங்க நகை சேரும்..!

0

தற்காலங்களில் அதிகரித்து வரும் விலைவாசி, சமசீரற்ற பொருளாதார நிலையால் தங்கு தடையில்லா பண வரவு இருக்க வேண்டும் என்ற பலரும் விரும்புகின்றனர். மேலும் பணத்தை விட உயர்ந்த தங்க நகைகள் வாங்கவும் விரும்புகின்றனர். இவை இரண்டையும் தரும் “மகாலட்சுமி துதி” இதோ.

மகாலட்சுமி துதி

ஒருமால் உளமகிழ் ஒருத்தி போற்றி
திருமா மகள் நின் செவ்வி போற்றி
ஒருமா மணியா ஒளிர்வாய் போற்றி
பிரியாது அவனுளம் பேணுவாய் போற்றி
வருமாசு அகற்றுசெம் மணியே போற்றி

திருமகளான மகாலட்சுமியை போற்றும் துதி இது. இந்த துதியை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் 9 முறை கூறி துதிப்பது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாகவும், மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாகவும் வீட்டில் மகாலட்சுமி படத்திற்கு தீபம் ஏற்றி, இத்துதியை தேவியை மனதில் நினைத்து 27 முறை கூறி துதித்து வந்தால் உங்கள் தொழில், வியாபாரங்களில் தங்கு தடையற்ற பண வரவு அதிகரிக்கும். பொன் ஆபரணங்களின் சேகரம் ஏற்படும். வீட்டில் பொருளாதார கஷ்ட நிலை நீங்கி, செல்வ வளம் கூடும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply