பல மடங்கு பலன் தரக்கூடிய சனிப்பிரதோஷம்..!

0

சிவாலயத்தில் பிரதோஷ தரிசனம் தொடர்ந்து செய்து வந்தால் முன் ஜென்ம பாவ வினைகள் கரைந்தோடும் என்பது ஐதீகம். சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் என்பது சனிப்பிரதோஷம் என்று சிறப்பாக வழிபாடு செய்யப்படுகின்றது. இருபது வகையான பிரதோஷ வழிப்பாட்டு முறைகள் ஆகமங்களில் கூறப்படுகிறது. இருப்பினும் சனிப்பிரதோஷம் ஆலயங்களில் விமரிசையாக வழிபாடு நடத்தப்படுகின்றது. தினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலான நேரம் ஆகும்.

இந்த தினப்பிரதோஷ நேரம் என்பதே இந்த சனிப்பிரதோஷ சம்பவத்தினால்தான் உருவானது. மிகவும் புண்ணியமான இந்த நேரத்தில் நாம் எந்த ஒரு மந்திரம் ஒரு முறை ஜபித்தாலும், அது பலகோடி மடங்கு ஜபித்ததற்கான புண்ணியத்தைத் தரும். சிவபெருமானுக்கும், அவரின் வாகனமான நந்திதேவருக்கும் உரிய அற்புதமான நாளில், பிரதோஷ வேளையில் சிவாலயங்களுக்குச் செல்வதும் அபிஷேகப் பொருட்களும் மலர்களும் சமர்ப்பித்து தரிசிப்பதும், பாவங்களைப் போக்கி, புண்ணியங்களைத் தந்தருளும் என்கின்றன புராணங்கள்! – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply