மரணம் வரப்போவதை இதை வைத்து எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்…!

0

மரணம் என்பது யாரும் விரும்பாத ஒன்று. ஆனால், பிறக்கும் போதே மரணம் நிச்சயம் என்பது எழுதப்படாத நியதி. ஆனால், அந்த மரணம் எப்போது வரும் யாராலும் கணிக்க முடியாது.

மரணத்தின் அறிகுறி என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்.

* வாய், காது மற்றும் கண் போன்ற உடல் உறுப்புகள் செயலிழப்பு அல்லது செயலிழந்து வருகிறது என்றால் அதிலிருந்து ஆறு மாதங்களில் மரணம் நிச்சயம் என் சிவ புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

* திடீரென உடல் வெள்ளை மற்றும் மஞ்சளாக நிறம் மாற துவங்குகிறது. உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் தென்படுகின்றன என்றால் அடுத்த ஆறு மாதத்தில் அந்த நபர் இறந்து போவார்.

* தொண்டை மற்றும் நாக்கு ஒருவருக்கு விடாமல் வறட்சி அடைந்துக் கொண்டே இருக்கிறது எனில், அந்த நபர் விரைவில் இறந்துவிடுவார் என்று அர்த்தம்.

* ஒருவரது இடது கை அச்சம் அல்லது பதட்டத்தின் காரணமாக நடுங்கிக் கொண்டே இருக்கிறது. நாவில் வறட்சி ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது என்றால், அந்த நபர் ஒரு மாதத்தில் இறந்துவிடுவர்.

* ஒருவரால் கருப்பு அல்லது சிவப்பு நிற வட்டத்தை நிலா மற்றும் சூரியனில் பார்க்க முடிகிறது என்றால் அவர் 15 நாட்களுக்குள் இறந்துவிடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

* ஒருவரால் நிலா மற்றும் நட்சத்திரங்களை பார்க்க முடியவில்லை என்றாலும் மிக மந்தமாக தான் தெரிகிறது எனில், அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

* ஒருவர் திடீரென ஊதா நிற ஈக்களால் சூழப்படுகிறார் என்றால் அவர் ஒரு மாதத்தில் இறந்துவிடுவார் என்று அர்த்தமாம்.

* கருடன், காகம், கழுகு – புறா ஒருவரது தலையில் வந்து அமர்வது மரணத்தின் அறிகுறி என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* ஒருவர் தனது நிழலில் தனது தலைப் பகுதியை காண முடியவில்லை என்பது மற்றுமொரு மரணத்தின் சமிக்ஞை என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* எதையும் சரியாக பார்க்க முடியாமல் போவது மற்றும் நெருப்பை தெளிவாக பார்க்க முடியாமல் போவது மரணம் உங்களை எட்டிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் சமிக்ஞை.

* எண்ணெய், தண்ணீர் போன்றவறில் ஒருவரது பிரதிபலிப்பை பார்க்க முடியாவிட்டால் ஆறு மாதத்தில் அவர் இறந்துவிடுவார் என சிவ புராணத்தில் கூறப்பட்டுள்ளது. – Source: webdunia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply