செல்வச் செழிப்போடு வாழ வைக்கும் காளி அம்மன்..!

0

சோழ தேசத்தை காக்கும் பொருட்டு ராஜராஜசோழன் நிறுவிய எட்டு காளிகளில் இவளும் ஒருவள். ராஜராஜன் தஞ்சை தவிர பெரும்பாலும் வசித்ததே இந்த ஊரில்தான். உடை வாள் தயாரிக்கும் ஊராதலால் உடையாளூர் என்று பெயர் வந்ததாக கூறுவார்கள். ஊரின் எல்லையிலேயே இவள் வீற்றிருக்கிறாள். எண் கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தி ஒரு சூலத்தால் அசுரனை குத்தும் கோலத்தில் அருள்பாலிக்கிறாள். பல நூறு குடும்பங்களின் குல தெய்வமே இவள்தான்.

அதனால் எப்போதும் யாரேனும் வந்து பொங்கலிட்டு வணங்கியபடி இருப்பார்கள். இந்த செல்வமாகாளியை வணங்கியோரும், உபாசித்தோரும் பெரும் செல்வச் செழிப்போடு வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறுவார்கள். அவர்கள் எங்கிருந்தாலும் இவளை தரிசிக்காமல் போவதில்லை. அவளின் திருப்பெயரிலேயே செல்வ எனும் சொல் உள்ளதால் ஏழ்மையை அகற்றி இன்னருள் புரிகிறாள். வறுமையின் கொடுமை அண்டாது காக்கும் காளியாக இவளைச் சொல்கிறார்கள். கும்பகோணத்திலிருந்து உடையாளூர் 10 கி.மீ. தொலைவிலுள்ளது. – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply