
வியாழக்கிழமை என்பது கடவுள் விஷ்ணு, பிரகஸ்பதி, குருபகவான் ஆகியோரை வழிபடுவதற்கான சிறப்பு திறமாகும். அதோடு இந்த நாள் ரிகஸ்பதிவார் என்று அழைக்கப்படும். வியாழக்கிழமையை குருவாரம் என்ற சிறப்பையும் பெற்றிருப்பது நம் எல்லோருக்குமே தெரிந்தது தான்.
இந்த வியாழக்கிழமை நாளில் பக்தர்கள் ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே என்ற பாடலைக் கேட்டும் துதித்தும் விஷ்ணுவை வணங்குவதுண்டு.
சடங்குகள்
பக்தர்கள் வியாழக்கிழமை நாளில் மஞ்சள் நிற ஆடை அணிவார்கள். கடவுள் விஷ்ணுவுக்கும் பிரகஸ்பதிக்கும் மஞ்சள் நிற மலர்களைக் கொண்டு பூஜைகள் செய்யப்படும்.
விரதம்
அன்றைய நாள் முழுக்க சாப்பிடாமல் விரதம் இருந்து ஒரே ஒருமுறை மட்டும் நெய்யுடன் கடலைப்பருப்பு சேர்த்து உணவாக உட்கொள்வார்கள். அதாவது மஞ்சள் நிற உணவை உண்ண வேண்டும் என்பதற்கான கடலைப்பருப்பும் நெய்யும் தேர்வு செய்யப்படுகிறது.
வாழைக்கன்று
நிறைய பேர் வியாழக்கிழமையில் விஷ்ணுவுக்கு பூஜை செய்கின்ற பொழுது, கடவுளுக்கு வாழைப்பழமும் சிலர் சிறிய வாழைக்கன்றையும் வைத்து வழிபடுவதுண்டு.
லட்சுமியும் ஹனுமனும்
வங்காளத்தில் வியாழக்கிழமை நாட்களில் மக்கள் லட்சுமி தேவியை வழிபாடு செய்வதுண்டு. அதேபோல் ஹனுமன் கோவிலுக்கு வியாழக்கிழமைகளில் செல்வதுண்டு.

நம்பிக்கை
கடவுள் விஷ்ணு தன்னை உண்மையாக நினைத்து வழிபடுகிற பக்தர்களுக்கு வியாழக்கிழமை நாட்களில் தான் காட்சி தருவாராம். சிலர் அன்று பிகஸ்பதி வடிவில் வருவார் என்று சொல்லப்படுகிறது. வியாழக்கிழமை நாட்களில் தங்களுடைய கடமையை ஒதுக்கி விட்டு பூஜை செய்கிறேன் என்பவர்களையும் விஷ்ணு கண்டுகொள்வதில்லை என்ற நம்பப்படுகிறது. தவறுகளை உணர்ந்து திருந்தி மன்னிப்பு குட்டுவிரதம் இருந்து வுணடுபவர்களை விஷ்ணு ஏற்றுக் கொள்வாராம்
நிறமும் அதிர்ஷ்ட கல்லும்
விஷ்ணுவுக்கும் வியாழக்கிழமைக்கும் உகந்த நிறம் என்றால் அது மஞ்சள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அதேபோல் புஷ்பராகம் மற்றும் மஞ்சள் நிற கனக புஷ்பராகக் கல் தான் விஷ்ணுவுக்கு இஷ்டமான அதிர்ஷ்டக் கற்கள் ஆகும்.
கோள்
கடவுள் விஷ்ணுக்கு உகந்த விருப்பமான அதிர்ஷ்ட கிரகம் என்றால் அது வியாழன் தான்.
இப்படி வியாழக்கிழமைக்கும் மஞ்சள் நிறத்துக்கும் கடவுள் விஷ்ணுவுக்கும் நிறைய தொடர்பு உண்டு என்பதைப் புரிந்து நாம் வழிபட்டால் கடவுள் நமக்கு சகலவித நன்மைகளை அள்ளித் தந்து அருள் பாலிப்பார்.
புரட்டாசியும் மார்கழியும்
புரட்டாசி மாதமும் மார்கழி மாதமும் தான் மாதங்களிலேயே புனிதத்துக்கு உரியவையாக கருதப்படுகின்றன. அதனால் தான் இந்த இரண்டு மாதங்களிலும் பெருமாள் வழிபாட்டுக்கு உரிய கடவுளாகப் போற்றப்படுகிறார். இவைற்றில் குறிப்பாக மார்கழி மாதம் மோட்சத்துக்கு உரிய மாதமாகக் கருதப்படுகிறது. – Source: dinakaran
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
