கேட்டதைக் கொடுக்கும் சக்தி படைத்த காமதேனு

0

தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். அப்போது பல பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் ஒன்றுதான் காமதேனு என்னும் பசு. இது தேவலோகத்தில் உள்ள பசுவாகும். கற்பக விருட்சத்தைப் போல, கேட்டதைக் கொடுக்கும் சக்தி படைத்தது இந்த காமதேனு.

இதனை ‘சுரபி’ என்று அழைப்பார்கள். பசுக்கள் அனைத்துக்கும் முன்னோடியாக இந்த காம தேனுவே விளங்குகிறது. இந்த பசுவானது, சப்த ரிஷிகளில் ஒருவரான வசிஷ்ட முனிவருக்கு உதவிகரமாக இருந்தது. கவுசிகன் என்ற மன்னன், தன் நாட்டினை வளப்படுத்துவதற்காக காமதேனுவை வசிஷ்டரிடம் கேட்டான். அவர் மறுத்ததால் வலுக்கட்டாயமாக காமதேனுவை இழுத்துச் செல்ல முயன்றான்.

ஆனால் காமதேனுவிடம் இருந்து வெளிப்பட்ட போர்வீரர்கள், கவுசிகனையும் அவனது படைகளையும் விரட்டியடித்தனர். இதையடுத்து கவுசிகன், தானும் தவம் செய்து மிகப்பெரிய ரிஷியாவதாக சபதம் செய்தார். அவரே பின்னாளில் விஸ்வாமித்திரர் என்ற மாபெரும் முனிவராக மாறினார். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply