‘மாங்கல்யம் தந்துனானே’ மந்திரத்தின் அர்த்தம் தெரியுமா?

0


திருமணத்தில் பெண்ணின் கழுத்தில் மாங்கல்யத்தினை அணிவிக்கும் போது கூறப்படும் மந்திரத்தின் அர்த்தம் என்ன என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த மந்திரத்திற்கான விளக்கத்தை பார்க்கலாம்.

‘மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்’ என்னும் குறித்த மந்திரத்தின் பொருள்

‘மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் ஆரம்பிக்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத்துணைவியாக என் சுகதுக்கங்களில் பங்கேற்று நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக’ என்பதாகும்.


‘மாங்கல்யம் தந்துனானேந…’ என்ற மந்திரத்தின் அர்த்தம் என்ன தெரியுமா?

‘மாங்கல்யம் தந்துனானேந…’ என்ற மந்திரம் ஓதிதான் தாலி கட்ட வேண்டுமா? –

மந்திரம் என்பது வேறு, சம்பாஷணை என்பது வேறு. சமஸ்கிருத மொழியில் உச்சரிக்கப்படும் அனைத்து சம்பாஷணைகளையும்
நாம் மந்திரங்கள் என்று புரிந்துகொண்டிருக்கிறோம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த வரிகள் மந்திரம் அல்ல, அது ஒரு ஆசிர்வாத வசனம்.
மணமகன், மணமகளை அதாவது தனக்கு மனைவியாகப்போகிறவளுக்கு மாங்கல்யக் கயிற்றினைக் கட்டி தனக்கு பந்தமாக்கிக்
கொள்ளும்போது சொல்லும் உறுதிமொழி இது.


“மாங்கல்யம் தந்துநானேந மம ஜீவன ஹேதுநா, கண்டே பத்நாமி சுபகே த்வம்ஜீவ சரத: சதம்” –

‘மங்களகரமான பெண்ணே, நான் வாழ்வதன் நோக்கம் நிறைவேறுவதற்காக, அதாவது தர்மமான முறையில் எனது வாழ்க்கை அமைவதற்காக
இந்தக் கயிற்றினை உனது கழுத்தினில் அணிவிக்கிறேன், நீ நூறு ஆண்டுகள் வாழ்வாயாக’ என்று மணமகளை ஆசிர்வதித்து மங்கல நாணை
மணமகன் அவளது கழுத்தில் முடிச்சிடுகிறான். இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த வரிகளை புரோஹிதர் மட்டும் சொன்னால் போதாது, புரோஹிதர்
ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிக் கொடுக்க மணமகன் மணமகளைப் பார்த்து அக்ஷரம் பிசகாமல் இந்த வரிகளைச் சொல்லி மங்கலநாணை அணிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் தாலிகட்டும் சம்பிரதாயம் முழுமை பெறும்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!!!

Leave a Reply