குழந்தை பாக்கியம் கிடைக்க லட்சுமி நரசிம்மருக்கு செய்ய வேண்டிய வழிபாடு..!

0

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஈச்சங்காடு கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. தனி கோவிலாக அமைந்துள்ள இங்கு லட்சுமி நரசிம்மர் மூலவராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 11 நாட்கள் திருவிழா நடத்தப்பட்டு, அதில் 9-ம் நாளன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். தினமும் இரண்டு கால பூஜை நடைபெறும். இக்கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமை நரசிம்மருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.

அன்று லட்சுமி நரசிம்மருக்கு துளசி மாலை, அலரிப்பூ, வெள்ளெருக்கு மாலைகள் சூட்டியும், சுண்டல், பொரி, பழம் வைத்து வழிபட்டால் அதனை முழுமையாக ஏற்றுக் கொண்டு பக்தர்கள் மனம் குளிர அருள்பாலிக்கிறார் லட்சுமி நரசிம்மர்.

குறிப்பாக சேவிப்போர் வேண்டும் வரம் அருளுகிறார். இதில் முக்கியமாக பணிகளில் பதவி உயர்வு, குழந்தை பாக்கியம், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஈச்சங்காடு லட்சுமி நரசிம்மர் கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஈச்சங்காடு லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.- Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply