சனியையும் ஆட்டிப்படைத்த ஆஞ்சநேயரின் இரகசியம்…

0

புராணக் கதைகளின் படி, சனி பகவானுக்கு ஆஞ்சநேயர் என்றால் பயம். அதனால் ஆஞ்சநேயர் மந்திரங்கள் படித்தால், சனியின் தாக்கங்கள் குறையும் என நம்பப்படுகிறது. ஜாதகத்தில் சனி தசை இருக்கும் நிலையால் அவதிப்படுபவர்கள் ஆஞ்சநேயர் மந்திரங்களை படிக்க வேண்டும். குறிப்பாக சனிக்கிழமைகளில் இதனால் அமைதியும் வளமும் பெருகும் என கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருவேலையில் அனுமன் தீவிரமாக இருந்த போது வந்தார் சனி பகவான். “ஆஞ்சநேயா உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல். அங்கு இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்” என்றார். “கடமையைச் செய்து கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு.

அதனால், தலையில் உட்கார்ந்து கொள்” என்றார். சனி பகவானும் ஏறி அமர்ந்தார். கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம்தாங்காமல் சனிபகவான் அலறினார். “சொன்ன சொல் தவறக்கூடாது.இரண்டரை மணி நேரம் கழித்துதான் இறங்க வேண்டும்” என்றார் அனுமன். அதன் பிறகே இறக்கிவிட்டார். “ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை” என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன். அனுமன் சாலீஸா ஒரு முறை ஔரங்கசீப்பை சந்திக்க துளசிதாஸ் சென்றிருந்தார். துளசிதாஸை பரியாசம் செய்த பேரரசர், கடவுளை தனக்கு காண்பிக்க சொல்லி சவால் விட்டார். உண்மையான பக்தி இல்லாமல் ராம பிரானை பார்ப்பது இயலாது என சாமார்த்தியமாக பதிலளித்தார் கவி.

இதன் விளைவாக, ஔரங்கசீப்பால் சிறைப் பிடிக்கப்பட்டார் துளசிதாஸ். சிறையில் இருந்த காலத்தில் தான் ஆஞ்சநேயர் மந்திரங்கள் அடங்கிய அனுமான் சாலீஸா என்ற இந்த அற்புதமான செய்யுளை இயற்றினார் எனவும் கூறப்படுகின்றது. காலையில் குளித்த பிறகு மட்டுமே இந்த மந்திரங்களை படிக்க வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இதனை படிக்க வேண்டுமானால் உங்கள் கைகள், பாதங்கள் மற்றும் முகத்தை முதலில் கழுவ வேண்டும். ஆஞ்சநேயர் மந்திரங்களை ஓதும் போது, தீய சக்திகளில் இருந்து விடுபடுதல் உட்பட மிகப்பெரிய பிரச்னைகள் வரை, ஆஞ்சநேயரின் ஆன்மிக பங்களிப்பு இருக்கும். ஆபத்தை விளைவிக்கும் தீய சக்திகளை நீக்கும் கடவுளாக கருதப்படுகிறார் ஆஞ்சநேயர். நீங்கள் தீய சக்திகளால் பிரச்னைக்கு உள்ளாகியுள்ளீர்கள் என்றால் ஆஞ்சநேயர் மந்திரங்களை உங்கள் தலையணையின் கீழ் வைத்து படுங்கள். அது உங்களுக்கு அமைதியை ஏற்படுத்தும். கடினமான எண்ணங்களை போக்கவும் கூட இது உதவும். – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply