ஸ்ரீ சாயிநாதர் இல்லாத இடம் எங்கும் இல்லை..!

0

ஸ்ரீ சாயி தரிசனம் நாமம் என்றால் சொரூபத்தை ஒருமித்த உச்சரிப்பின் மூலம், என் நாமத்தை உச்சரிப்பதால் வேறு சிந்தனைகள் தோன்றாது. என் பக்தர்களுக்கு தீங்கு நேரிட விடமாட்டேன். என் பக்தர்களை நானே கவனித்துக் கொள்ள வேண்டும். ஒரு பக்தன் விழும் நிலையிலிருந்தால், நான் நான்கு கரங்களை அத்தருணத்தில் நீட்டி காக்கிறேன். அவனை விழ விடவே மாட்டேன். யார் அதிர்ஷ்டசாலியோ எவருடைய பாவங்கள் ஒழிந்தனவோ அவர்கள் சாய்பாபாவின் வழிபாட்டை எய்துகிறார்கள். தம்முன் வீழ்ந்து பணிந்து சரணாகதியடைந்த எந்த மனிதரையும் சாய்பாபா ஆசிர்வதிக்கிறார். உனக்குத் தேவையானவற்றை நான் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன். யார் அதிர்ஷ்டசாலியோ எவருடைய பாவங்கள் ஒழிந்தனவோ அவர்கள் சாய்பாபாவின் வழிபாட்டை எய்துகிறார்கள். தம்முன் வீழ்ந்து பணிந்து சரணாகதியடைந்த எந்த மனிதரையும் சாய்பாபா ஆசிர்வதிக்கிறார்.

நான் அனைவருள்ளும் வியாபித்திருக்கிறேன். நான் இல்லாத இடமே இல்லை. பக்தர்களுக்காக நான் எங்கும், எப்படியாவது தோன்றுவேன். என்னை நம்புகிறவர்களே! உங்களுக்கு சொல்வது இதுதான். முதலில் எனக்கு உங்கள் உள்ளத்தில் இடம் கொடுத்து, எனக்கே முக்கியத்துவம் தாருங்கள். நீங்கள் எப்போதும் ஜெயிப்பீர்கள். என் சுத்த தத்துவம் என் நாம ஸ்மரணயினால் தெரிய வரும். ஏங்குதல், போராட்டங்களை விடுத்து என்னையே சார்ந்திரு,நான் உன்னுடனையே இருப்பேன். நான் உன்னுடைய தாகத்தை தீர்ப்பதற்காக வருவதற்குள் உன் மனம் சஞ்சலமடைந்து, எங்கேயோ செல்லுகிறாய். நான் உனக்காகவே இருக்கிறேன். பாரத்தை என்மேல் சுமத்து சாந்தி ஏற்படும். – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply