சனீஸ்வர தோஷம் நீங்க முன்னோர்கள் கூறும் வழிமுறை…!

0

பனிரெண்டு ராசிகளில் உள்ள ராசிக்காரர்களுக்கு சுமார் எழு ராசிகளின் அமைப்பு உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் ஏழரை சனி, கண்ட சனி, அஷ்டம சனி போன்ற பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். இதனால் அவர்களுக்கு வாழ்வில் எடுத்த காரியங்களில் தோல்வி, பணமுடக்கம், வம்பு சண்டை, விரக்தி, தொழில் முன்னேற்றமின்மை, எதிர் காலமே சூன்யமானது போன்ற இன்னல்களுக்கு ஆட்பட்ட வாழ்க்கையை மிகவும் சிரமமாக அனுபவித்து கொண்டிருப்பார்கள்.

சனீஸ்வர தோஷத்தின் பிடியில் உள்ளவர்கள் பல்வேறு கோவில்களுக்கு சென்று நவகிரகங்களுக்கு தீபம் போட்டு அர்ச்சனை அபிஷேகம் செய்தும் சரிவர பலன் காணாமல் மனம் நொந்த நிலையில் இருப்பவர்கள். இதற்கு பரிகாரமாக சித்தர்கள் மிக எளிய வழிமுறைகள் வகுத்துள்ளனர்.

அதிகாலை குளித்து முடித்து கிழக்கு நோக்கி நின்று கொண்டு பருதி என்னும் சூரிய பகவானை வணங்கி “ஓம் கிலி சிவ” என்ற மந்திரத்தை 128 முறை செபிக்கவும். இப்படி ஒரு மண்டலம், அதாவது 48 நாட்கள் செபித்து வர, உடும்பு போல் பற்றி நின்ற சனீஸ்வர தோஷம் விலகிவிடும். இது ஏராளமானோர் செய்து பயனடைந்த முறையாகும்.- Source: webdunia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply