வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக, என்ன செய்யலாம்… என்ன செய்யக் கூடாது!

0

கையில் காசு இருந்தாலும் பையில் தங்கலையே என்று இன்றைக்கு பலரும் கவலைப்படுகின்றன. வருமானத்தை விட செலவுகள்தான் அதிகம் இருக்கிறது. வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வருமானம் பெருக செய்ய வேண்டிய பரிகாரங்களை பார்க்கலாம். ஒருவரின் ஜாதகத்தில் 2வது வீட்டில் சனி அமர்ந்திருந்தால் பல லட்சம் சம்பாதித்தாலும் கையில் காசு தங்காது. வாயை திறந்தாலே வம்புதான். ஜாதகத்தில் 2வது வீடு நன்றாக இருந்தால் நல்லது நடக்கும் குடும்ப வாழ்க்கையும் சிறப்பானதாக இருக்கும். சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய லட்சுமிகரமான மங்களப் பொருட்களில் மகா லட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.

இலவங்கப்பட்டை குச்சியில் பத்து ரூபாய் தாளை குத்தி நம் பண பெட்டியில் வைத்து வர பண வரவு அதிகரிக்கும். இலவங்கப்பட்டையும் பண வரவை ஈர்க்கும் ஒன்றாகும். புதினா இலைகளை பர்ஸில் வைத்து வர பண வளர்ச்சி நிச்சயம். ஒவ்வொரு முறை பணத்தை வெளியே எடுக்கும் போதும் இலையை பார்த்து வர வேண்டும். மேலும் மூன்று நாட்களுக்கொரு முறை மாற்றி விட வேண்டும். பச்சை கற்பூரம்,சோம்பு,ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வர பணம் கைக்கு வரும்.

வெந்தயம் சிறிது கிண்ணத்தில் போட்டு திறந்த நிலையில் வீடு அடுப்பங்கரையில் வைத்து வர என்றும் உணவு பொருட்களுக்கு குறைவிருக்காது. வாரம் ஒரு முறை பழையதை ஓடும் நீரில் போட்டு விட்டு புதியதாய் மாற்றி விட நல்லதே நடக்கும். இருட்டியபின் துர்சக்திகள் உலவும் நேரம் அது. அவைகளை ஈர்க்கும் வகையில் நமது செயல்களும் வீடும் இருந்தால் வீட்டில் துரதிர்ஷ்டம், எதிர்மறை நிகழ்வுகள் நடக்கும். ஆகவேதான் அவை நெருங்காதபடி மாலை ஆனதும் விளக்கு ஏற்றச் சொல்கிறார்கள் வீட்டில் பெரியவர்கள். மாலை நேரத்தில் வீட்டி விளக்கு ஏற்றி ஆண்டவனை வணங்குவது சிறந்தது. குத்துவிளக்கு ஏற்றும்போது ஒரு திரி மட்டும் போடக்கூடாது.

இரு திரி இட்டு ஒரு முகம் ஏற்ற வேண்டும். எவர் வீட்டில் லக்ஷ்மி வாசம் செய்கிறாளோ அங்கு தீய சக்திகள் நெருங்காது. விளக்கேற்றியபின் வீடு பெருக்கக் கூடாது. இதனால் லஷ்மியின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமாம். வீடு பெருக்கும்போது செல்வத்தையும் சேர்த்து பெருக்குவது போலாகும். மாலையில் துளசிக்கு நீர் ஊற்றக் கூடாது. துரதிர்ஷ்டம் உண்டாகுமாம்.

மாலை சூரியன் மறைந்த பின் , தலை முடியை வாருவதால் உதிரும் முடிகள் தீய சக்திகளை ஈர்ப்பவை. முடிகள் வசியம், மற்றும் சூனியம் வைக்க உபயோகப்படுத்துவது இதனால்தான். ஆகவே வீட்டிற்குள் முடியை மாலை வேளையில் சீவக் கூடாது. செவ்வாய் கிழமையில் நகம் வெட்டினால் பணம் கிடைக்கும் என்பதும் ஐதீகம். மாலையில் நகம் வெட்டுதல் வீட்டில் நேர்மறை சக்தியை குறைக்கும் சக்தி உண்டு. இது செல்வத்தை குறைக்க வழி செய்யும். மாலை வேளையில் அரசமரத்தை வலம் வரக்கூடாது. கோயிலுக்குக் கொண்டு செல்லும் எண்ணெயை கோயில் விளக்கிலே தான் ஊற்ற வேண்டுமே தவிர வேறு ஒருவர் ஏற்றி வைத்த விளக்கில் ஊற்றக்கூடாது. மாலையில் தூங்கினால் லக்ஷ்மி தேவிக்கு பிடிக்காது என்பதால் அந்த வீட்டிற்கு மீண்டும் வர மாட்டாள் என்று கூறுகின்றனர். ஆகவே விளக்கேற்றிய பின் தூங்காதீர்கள். அப்புறம் அந்த வீட்டை லட்சுமி எட்டி கூட பார்க்க மாட்டாள்.- Source: oneindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply