அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் துர்க்கை அம்மன் வழிபாடு..!

0

துன்பங்களை பிறருக்குக் கொடுப்பதில் ஈவு, இரக்கமின்றி செயல்படுபவர்களை, தான் வாழ பிறரைக் கெடுப்பவர்களை, துன்பத்திலாழ்த்தி மாய்ப்பதில் அசுர கிரகம் ராகு ஒரு போதும் அஞ்சுவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சம் என்றடையும் போது, ராகுவால் வரக் கூடியத் துன்பங்களைக் களைவதில் முன்னிருப்பவர்கள் துர்க்கையம்மனும், நாகம்மனும் தான்!

தன் குடும்ப நன்மைக்காக வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில், எலுமிச்சையில் இரு விளக்கு நெய் தீபமேற்றி, ஐந்து ஊதுவத்தி, மஞ்சள் சாமந்திப்பூ / மல்லிகைப்பூ / மஞ்சள் தூள் சமர்ப்பித்து ஏழு / ஒன்பது வாரங்கள் செய்து அடுத்த வாரம் அர்ச்சனை செய்து எலுமிச்சையில் இரு நெய் விளக்கேற்றுவது நன்மை தரும்.

தன் குடும்பத்தில் நோய் / தீரா நோயினால் பாதிக்கப்பட்டிருப்பின், செவ்வாய்க் கிழமை ராகு காலத்தில் இரு நெய்விளக்கு எலுமிச்சம்பழத்தில் ஏற்றுவது நல்லது. தகுந்த மருத்துவ உதவி பற்றிய செய்தி அறிந்தவர் / அறியாதவர் வாயிலாக கேட்டுப் பலன் பெறவும், நோயின் தீவிரம் குறைந்து படிப்படியான முன்னேற்றம் கிட்டும்.

தன் குடும்பப் பிரச்சனைகள் / வம்பு / வழக்கு / கடன் என குடும்பத்தின் உறுப்பினர்களினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தீர ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றுவது பலன் தரும். பிரச்சனைக்கு அடிப்படைக் காரணமான பழக்க வழக்கத்தை விடுவது, பழைய விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பது, கடன் அடைக்க வழி தேடாமல் கடன் வாங்கிக் கொண்டே இருப்பது, சூதாட்டம், மது, மாதுப் பழக்கத்தை விட்டொழிக்காமல் இருப்பது ….. இப்படி தேவையற்றப் பழக்கங்களை விடாமல் இருப்போருக்கு எத்தனை தெய்வங்களுக்கு பரிகாரம் செய்தாலும் பிரச்சனைகள் தீருவது போல இருந்தாலும் மறுபடியும் மறுபடியும் தொடர்வதை தவிர்க்க இயலாது.

தீயப் பழக்கத்தைக் கைவிட்டு, தெய்வத்தை நம்பி, பரிகாரமாய் செய்யும் போது மகத்தான பலன் கிட்டும்.

நாகம்மனுக்கு பூஜைகள் செய்வதென்றால், மஞ்சள் தூளை சிலை / புற்றி மீது செலுத்தி, அர்ச்சனை செய்து, தேங்காய் மஞ்சள் வாழைப்பழத்தை முதியோருக்கு கொடுத்தல் வேண்டும். விளக்கு ஏழு விளக்கு ஏற்ற வேண்டும்.( புற்றுக் கோயில் – வாணியம்பாடி – பெங்களூர் சாலையின் நடுவிலே இக்கோயில் உள்ளது. மகத்தான பலன் கொடுக்கும் ஆலயம் இதுவாகும் )

துர்க்கையம்மன் கோயில் தனியாக இருக்கும் ஆலயங்களிலும், சிவாலயங்களில் உள்ள துர்க்கை சன்னதியிலும் விளக்கு ஏற்றி வழிபடலாம். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply