மார்பக புற்றுநோயை தடுக்கும் உணவுகள்!

0

ஆஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் காரணமாகவே 4-ல் 3 பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படலாம் என கணிக்கப்படுகிறது. இந்நிலையில் ஹார்மோன் காரணமாக ஏற்படும் புற்றுநோயிலிருந்து தப்பிக்க மாதுளம்பழம் சாப்பிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். மாதுள்ம்பழத்தில் இயற்கையாகவே பைட்டோகெமிக்கல் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

எல்லஜிக் அமிலம் என்று அழைக்கபடும் இது, புற்றுநோய் செல்கள் வள்ர்வதை தடுக்கிறது. மாதுளம்பழத்தில் பைட்டோகெமிக்கல், அஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோனை கட்டுபடுத்துகிறது. இதனால் மார்பகப் புற்றுநோய்க்குக் காரணமான செல்கள் மற்றும் கட்டிகள் வளர்வது தடுக்கப்படுகிறது என கலிபோர்னியாவின் “டாரேட்டில் உள்ள சிட்டி ஆஃப் ஹோப்” மார்பக புற்றுநோய் ஆராய்ச்சி திட்டத்தின் இணை இயக்குனர் ஷியாவுன் சென் தெரிவித்துள்ளார்.

மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு மாதுளம்பழம் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது புற்றுநோயை கட்டுபடுத்துவதற்கான அமிலம் இருப்பது தெரியவந்துள்ளது. மாதுளையின் மருத்துவ குணங்கள் அதிகம் எனினும், இது ஆய்வக முடிவுதான். நிஜமா இது சாத்தியமா என்பதை உறுதியாக கூற இயலாது ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டியின் இண்டர்னல் மெடிசின் துறை பேராசிரியர் கேரி ஸ்டோனர் கூறினார். – Source: webdunia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply