இரவில் பிறந்தவர்களா நீங்கள்? கொடுத்து வைச்சவங்க போங்க.. ஏன் தெரியுமா?

0


பிறந்த நேரம் என்பது நம் எல்லோருக்குமே மிகவும் அவசியமானது. ஏனெனில் ஒருவரின் பிறந்த நேரத்தை வைத்து தான் அவர்களின் எதிர்காலத்தின் நன்மைகள் மற்றும் பாதிப்புகளை பற்றி சரியாக தெரிந்துக் கொள்ள முடியும்.


இரவில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? என்பதை பற்றி சில தகவல் பின்வருமாறு:


சூரிய அஸ்தமனம் மற்றும் சந்திரன் உதிக்கும் நேரத்தில் பிறந்தவர்கள், நல்ல சிந்தனையாளராகவும், கலை மற்றும் இசையில் மிகுந்த வல்லவராகவும், வாழ்க்கையை மிகவும் ரசித்து வாழும் ரசனையாளராகவும் திகழ்வார்கள்.


இரவில் பிறந்த அனைவருமே தங்களது தாய் மீது அதிக அன்பு மிக்கவர்களாக இருப்பார்கள்.


இவர்களிடம் ஏதாவது ஒன்று குறித்து கருத்து கேட்டால் கூட அதை பல்வேறு வகையில் ஆராய்ந்து பார்த்து பின்னர் பதிலளிக்கும் வல்லமை உடையவர்கள்.


மேலும் இரவில் பிறந்தவர்கள், அதிக தன்னம்பிக்கை கொண்டவர்கள். ஒரு விசயத்தில் முடிவெடுத்து விட்டால், பின்பு அதை மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள்.


இத்தகையவர்கள் பகலை விட இரவு நேரங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். அதிக புத்தி கூர்மை மற்றும் சிறந்த விமர்சகராக இருக்கும் இவருக்கு, ஒரு பெரிய நண்பர் பட்டாளமே இருக்கும்.

Leave a Reply