மகாளய பட்சம் செய்வது எப்படி? மறக்காம இத படியுங்க..!

0

பட்சம் என்றால் 15 நாட்கள், மகாளயம் என்றால் மகான்களின் இருப்பிடம். இறந்து போய்விட்டாலும் கூட நமது முன்னோர்கள் மகாளய பட்சம் 15 நாட்களும் பூமிக்கு வந்து நம்முடன் தங்குவதாக சாஸ்திரம். ஆகவே தான் இந்த 15 நாட்களிலும் பித்ருக்களுக்கு நாம் அன்னம் அளிக்க வேண்டுமே தவிர, மற்ற விசேஷமான பூஜைகளையோ, ஹோமங்களையோ செய்யக்கூடாது என்கிறது சாஸ்திரம்.

மகாளயத்தை எப்படிச் செய்யலாம்? மகாளயத்தை 1. பார்வணம், 2. ஹிரண்யம், 3. தர்ப்பணம் என்று மூன்று வழிகளில் செய்யலாம்.

1) பார்வணம் என்பது ஆறு பிராமணர்களை (பித்ருக்களாக) வரித்து, தந்தை, தாய், தாத்தா, பாட்டி ஆகியோருக்கு ஹோமம் செய்து, சாப்பாடு போடுவது.
2) ஹிரண்யம் என்பது அரிசி வாழைக்காய் ஆகியவைகளை தந்து தர்ப்பணம் செய்வது.
3) தர்ப்பணம் என்பது அமாவாசை போல் தர்ப்பணமாக செய்வது.

இவற்றில் ஏதாவது ஒருவிதத்தில் தனது பித்ருக்களுக்கு மகாளயத்தை செய்து தங்கள் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
ஒருநாள் மட்டும் மகாளயம் செய்பவர்கள், மகாபரணி (28-09-18 வெள்ளி), மத்யாஷ்டமீ (02-10-18 செவ்வாய்), மகாவ்யதீபாதம் (01-10-18 திங்கள்), கஜச் சாயா (06-10-18 சனி), ஆகிய நாட்களில் ஏதாவது ஒருநாளில் மகாளயம் செய்யலாம். இவை மிகச் சிறந்த நாட்கள் ஆகும்.

சன்யாசியாக சித்தியானவர்களுக்கு 06-10-18 சனி அன்றும், விபத்தால் துர்மரணம் அடைந்தவர்களுக்கு 07-10-18 ஞாயிறு அன்றும், கணவருக்காக மனைவி செய்யும் மகாளயம் மற்றும் பிரம்மச்சாரிகளுக்கு செய்யும் மகாளயத்தை 08-10-18 திங்கள் அமாவாசை அன்றும் செய்யலாம்.

மகாளய பட்சத்தில் தாய்- தந்தையருக்கு வருடா வருடம் செய்யும் சிராத்தம் நேர்ந்தால், சிராத்த நாளன்று சிராத்தம் செய்து விட்டு அதற்கு பிறகு மற்றொரு நாளில் மகாளயத்தை செய்ய வேண்டும். – Source: Maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply