
தேவர்களின் குரு ‘பிரகஸ்பதி’ எனும் வியாழ பகவான் ஆவார். நவக்கிரகங்களில் பூரண சுப கிரகமாக போற்றப்படுபவர் இவர். ‘குருவருள் இருந்தால் திருவருள் உண்டாகும்’ என்பதும், ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதும் குரு பகவானை சிறப்பித்து கூறும் பழமொழிகள். பொதுவாக குரு இருக்கும் இடத்தைவிட அதன் பார்வை பதியும் இடங்களே சிறப்பான பலன்களைப் பெறுவதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது
உலோகம்- தங்கம்
நவரத்தினம் – புஷ்பராகம்
வஸ்திரம் – மஞ்சள் நிற வஸ்திரம்
வாகனம் – யானை
சமித்து – அரசு
சுவை – இனிப்பு

அதிதேவதை – பிரம்மா, தட்சிணாமூர்த்தி
குணம் – சாத்வீகம்
ஆட்சி வீடு – தனுசு, மீனம்
உச்ச வீடு – கடகம்
நீச வீடு – மகரம்
நட்சத்திரங்கள் – புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
குரு திசை – 16 வருடங்கள்
ஒரு ராசியில் தங்கும் காலம் – ஒரு வருடம்

எண்கணிதப்படி எண்- 3
தானியம் – கொண்டக்கடலை
புஷ்பம் – முல்லை, மஞ்சள் நிறப்பூ
காரகத்துவம் – புத்திரப்பேறு. – Source: Maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
