வாழ்வில் என்றுமே லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ்வதற்கு நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரங்கள்..!

0

அஷ்ட லட்சுமிகள். லட்சுமி, குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம” என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கூறலாம்.

சுவாமி படத்திற்கும் கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும். விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது.

மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும். இது எதுவுமே செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும். இதை தினமும் கூற அருள்செல்வம் முதலில் வரும், பின்பு பொருள்செல்வம் தானாக தேடி வரும்.

மந்திரம்:

ஓம் அகத்தீசாய நம!
ஓம் கரூவூர்தேவாய நம!
ஓம் போகதேவாய நம!
ஓம் கோரக்கதேவாய நம! – Source: webdunia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply