
சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் ஆயிரத்தெட்டு யோசனைகள், பிளான், வாஸ்து என ஒரு வழி ஆகிவிடுவோம். வாயிற்படி எந்த பக்கம் வைக்க வேண்டுஅமன்று வாஸ்து பார்க்கும் நாம் ஜன்னல் வைப்பதைப் பற்றி கவலைப்படுவதே கிடையாது.
ஆனால் வீட்டில் ஜன்னல் இருக்கும் திசை மிக முக்கியம். ஜன்னல் இருக்கும் திசையைப் பொருத்தும் உங்கள் வீட்டின் பொருளாதாரம் ஏற்ற இறக்கம் அடையும்.
வடக்கு திசைக்கான அதிபதி குபேரன் என குறிப்பிடப்படுகிறது. சோமன் தான் குபேரனின் அதிதேவதை.
குபேர கடாட்சம் தங்கள் வீட்டில் நிரம்பியிருக்க வேண்டுமென விரும்பும் நபர்கள் வீட்டில் வடக்கு ஜன்னல் அமைத்து கட்டுவது நல்லது.

மஹாபத்மம், பத்மம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலாகர்வம் எனும் ஒன்பது வித நிதிக்குவியல்கள் குபேரனிடம் இருக்கின்றன. இவற்றில் சங்கமம், பத்மம் முதல் நிலை தகுதி பெரும் நிதிகள் என குறிப்பிடப்படுகின்றன
கோயில்களில் கோபுரங்களின் ஈசானிய மூலையில் இருந்து வாயுள் மூலைக்கு வருகிற பகுதியில் தான் குபேரனின் சிற்பங்கள் அமைந்திருக்கும். இது தான் வழக்கம்.
அதேபோல வீடுகளில் கூட பண வைக்கும் பெட்டி, பை, பீரோ போன்றவற்றை வடக்கு திசை நோக்கி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

வடக்கு திசையில் வீட்டின் பொது சுவர் இருப்பது உங்கள் தோளில் நீங்களே பாரம் ஏற்றி வைத்துக்கொள்வது ஆகும்.
நீங்கள் வசிக்கும் வீட்டின் வாசல் எத்திசை நோக்கி இருப்பினும், வடக்கு திசையில் சூரிய வெளிச்சம் படும்படி அமைக்க வேண்டும்.
இதற்கு ஏற்ப வடக்கு திசையில் ஜன்னல் அமைப்பது வீட்டின் வருமானத்தை பெருக செய்யும் என்று வாஸ்து குறிப்பிடுகிறது. – Source: eenaduindia
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
