அரிசியின் விலையில் உண்டான மாற்றம்.

0

ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 35 – 40 ரூபாவினால் குறைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை ஒரு கிலோ நெல்லின் விலை இருபத்தி நான்கு ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், நேற்றைய தின (24) நிலவரப்படி ஒரு கிலோ நெல் 101 ரூபாவாக குறைந்துள்ளது.

ஒன்றரை மாதங்களுக்கு முன், ஒரு கிலோ நெல், 125 ரூபாய்க்கு, மில்காரர்கள் கொள்முதல் செய்தனர். மில் உரிமையாளர்கள் அறுபத்து நான்கு கிலோகிராம் கொண்ட நெல் மூட்டையை எட்டாயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்தனர்.

இந்நிலையில் , நேற்று (24) ஒரு நெல் மூட்டை ஆறாயிரத்து ஐநூறு ரூபாவுக்கு விற்பனையானது.

இந்த பருவ அறுவடையின் போது விவசாயிகளிடம் இருந்து ஒரு மூட்டை நெல் 4500 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய பாரிய ஆலை உரிமையாளர்கள் மத்தியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு கிலோ நெல் எழுபது ரூபாய்க்கு வாங்குவதே அவர்களின் இலக்காக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a Reply