இலங்கையில் மீண்டும் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளை அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, டீசல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 25 ரூபாவினாலும் உயர்த்தப்படவுள்ளது.
இதன்படி, தற்போது 415 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீட்டர் டீசல் இன்று நள்ளிரவு முதல் 430 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
மேலும், தற்போது 340 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 365 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
இதேவேளை, ஏனைய பெற்றோலிய பொருட்களின் விலையில் மாற்றம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



