அவரச தேவைக்கு நகை அடமானம் வைக்க போகிறீர்களா? இந்த பொருளில் கொஞ்ச நேரம் நகையை வைத்த பின் அடமானம் வைத்தால், நகை போன தடம் தெரியாமல் வீட்டுக்கு வந்து விடும்.

0

நகையை அடமானம் வைக்க வேண்டும் என்று யாரும் விரும்பி வைப்பது கிடையாது. ஏதோ ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலை அல்லது வீட்டில் ஏதோ சுப நிகழ்ச்சிகள் அதற்கு நம் கையிருப்பு போகவில்லை எனும் சமயங்களில் நகை அடமானம் வைக்க வேண்டிய சூழ்நிலை வரும். இது சாதாரணமான மனிதரிலிருந்து பெரும் செல்வந்தர் வரையிலும் நடக்கக்கூடிய விஷயம் தான் அவரவர் நிலைக்கேற்ப வைக்கும் பொருள் மாறும் ஆனால் எல்லோர் வாழ்விலும் ஏதோ ஒரு காலகட்டத்தில் இப்படியான சூழ்நிலைகளை சந்திக்க தான் செய்வோம் அப்படி ஒரு சூழ்நிலை வரும் பொழுது அந்த நகையை இது போல செய்த பிறகு அடமானம் வைத்தீர்கள் என்றால் விரைவாக உங்கள் நகையை திருப்ப முடியும்.

இதை செய்ய அடமானம் வைக்க போகும் நகை உங்கள் பீரோவில் இருந்தால் அப்படியே எடுங்கள் கொள்ளுங்கள். நீங்கள் அணிந்து கொண்டு இருந்தீர்கள் என்றால் அந்த நகை கழற்றும் போது முன்புறமாக கழற்றி எடுத்து கொள்ளுங்கள். அடமானம் வைக்கும் நகையை முதலில் மஞ்சள் கலந்த தண்ணீரில் நனைத்த பிறகு எடுத்து துடைத்து அதை ஒரு கவரில் போட்டு விடுங்கள். அதன் பிறகு அதில் மஞ்சள் நிறத்தில் உள்ள பூ அல்லது மஞ்சள் கிழங்கு இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை அந்த கவரில் போட்டு உங்கள் வீட்டு பூஜை அறையில் கொஞ்சம் நேரம் நகை கவரை வைத்து விடுங்கள்.

நகையை எடுக்கும் போது, இந்த நகையை நான் இந்த தேவைக்காக அடமானம் வைக்கிறேன். இது விரைவாக எனக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்று உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்ட பிறகு நகையை அடமானத்திற்கு கொடுங்கள்.

அந்தக் கவரில் உள்ள மஞ்சள் ஒரு பிளாஸ்டிக் பாக்ஸில் போட்டு மூடி உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள். நகை திரும்ப உங்கள் கைக்கு வந்தவுடன் அந்த பூவை எடுத்து நீரில் விட்டு விடுங்கள். மஞ்சளை நீங்கள் முகத்திற்கு தேய்க்க அல்லது வேறு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லை என்றால் அதையும் நீர் நிலைகளில் விட்டுவிடலாம்.

இப்படி செய்த பிறகு உங்கள் நகை அடமானத்திற்கு சென்றால் நிச்சயமாக நீங்கள் எதிர்பார்த்ததை விட, விரைவாகவே உங்கள் நகை உங்களுக்கு கிடைத்து விடும். இந்த எளிய பரிகாரத்தை செய்து உங்கள் நகை உங்கள் திரும்ப கிடைக்க வழி செய்து கொள்ளுங்கள். –

Leave a Reply