திருவள்ளூரில் மஞ்சப்பை வழங்க முதன் முறையாக எந்திரம்- ரூ.10 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

0

பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மஞ்சப்பை பயன்படுத்த அரசு ஊக்குவித்து வருகிறது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மூலம் தொழிற்சாலைகளின் நிதிஉதவியுடன் 6 மஞ்சப்பை விற்பனை எந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த மஞ்சப்பை விற்பனை எந்திரத்தில் ரூ.10 செலுத்தி ஒரு மஞ்சபையை பெற்றுக் கொள்ளலாம்.

இதுபற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து முதன்முறையாக மஞ்சப்பை வழங்கும் எந்திரத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், திருவள்ளூரில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்திலும் வைக்கப்பட்டது.

இந்த எந்திரங்களை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பா.சி.சம்பத்குமார், உதவி பொறியாளர்கள் கி.ரகுகுமார், சு.சபரிநாதன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் கூறும்போது, “ரூ.1, 2, 5 புதிய நாணயம் மற்றும் 10 ரூபாய் நோட்டை எந்திரத்தில் செலுத்தி மஞ்சப்பைகளை பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.

Leave a Reply