07 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை.

0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி, பதுளை, கேகாலை, குருணாகல், மாத்தளை, மொரனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய 07 மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலாளர் பிரிவு, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவு, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, கங்கவட்ட கோரளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் கற்பாறை சரிவுகள் மற்றும் மண்சரிவுகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் கோரிக்கை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply