திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு தற்போது எத்தனை கோடி தெரியுமா? தங்கம் மட்டும் எத்தனை டன் உள்ளது தெரியுமா?

0

நம்மில் பலர் திருமலை திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை ஒருமுறையாவது தரிசித்திருப்போம். அப்படி திருப்பதி செல்லும்போது ஏதாவது ஒரு பிராத்தனையை மனதில் வைத்து அது நிறைவேறிய பிறகு அதற்கான காணிக்கையாக நம் கையில் உள்ள ஒரு தொகையை அங்கு இருக்கும் உண்டியலில் போடுவதையும் வழக்கமாக கொண்டிருப்போம். இப்படி பல லட்சம் பக்தர்கள் தங்களின் காணிக்கையை செலுத்துவதன் பயனாக இன்று திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு நம்மில் பலரையும் ஆச்சரிய படுத்தும் வகையில் உயர்ந்துள்ளது. அது குறித்து இங்கு விரிவாக பார்ப்போம்.

கடந்த 1933-ம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானம் தொடங்கப்பட்டு, திருப்பதி கோவிலின் நிர்வாகங்கள் உள்ளிட்ட பலவேறு விடயங்களை தேவஸ்தானம் தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பாக திருப்பதி கோவிலின் சொத்துமதிப்பு குறித்த ஒரு அறிக்கை சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையின் படி, கடந்த செப்டம்பர் 30, 2022 நிலவரப்படி தங்கம்: 10.3 டன் பணம்: 15,938 கோடி மற்றும் உபரியாக இருக்கும் பணம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் திருப்பதி கோவிலின் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி சொத்துக்கள் குறித்து, தேவஸ்தான அதிகாரி ஒருவர் பேட்டி ஒன்றில் கூறுகையில், தற்போது திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு ரூ.2.26 லட்சம் கோடி என்றும், இதில் திருப்பதி கோவிலுக்கு சொந்தமான நிலம், கட்டிடம், காணிக்கை இப்படி அனைத்தும் அடங்கும் என்றும், இது கடந்த 2019 ஆம் ஆண்டை காட்டிலும் 2,913 கோடி அதிகாத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அதே சமயம் கடந்த 2019 ஆம் ஆண்டு 7.3 டன்னாக இருந்த தங்கத்தின் இருப்பு தற்போது 10.3 டன்னாக அதிகரித்துள்ளது என்றும் கூறி உள்ளார்.

திருப்பதி கோவிலுக்கு சொந்தமாக நாடு முழுவதும் 900க்கும் மேற்பட் அசையா சொத்துக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது. வங்கியின் இருக்கும் பணத்தின் மூலம் மட்டுமே ஆண்டுக்கு 600 கோடிக்கு மேல் வட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply