கச்சா எண்ணெய் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்.

0

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மேலும் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் எரிபொருள் தேவை குறைந்ததாலும், அமெரிக்காவில் வட்டி விகிதம் மீண்டும் உயரும் என்ற அடிப்படையிலும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 94.45 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87.90 டொலராகவும் குறைந்துள்ளது.

இதேவேளை, எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், நாட்டில் எரிபொருளின் விலை நேற்று (03) திருத்தியமைக்கப்படவிருந்த போதிலும், அவ்வாறான விலை திருத்தம் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply