எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான தகவல்.

0

எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் எரிவாயு விலை திருத்தம் குறித்து நாளை மறுதினம் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், தனது நிறுவனத்தில் போதுமான அளவு எரிவாயு கையிருப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

விலை குறையும் என வெளியாகும் செய்திகளை கருத்திற்கொண்டு விற்பனை முகவர்கள் கையிருப்புக்கான முன்பதிவுகளை தாமதப்படுத்துவதால் சந்தையில் தற்போது எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்வரும் காலங்களில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply