சம்பாதித்த பணம் கையில் தங்க வில்லையா? அடிக்கடி கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறதா?

0

இன்று உலகமே ஓடிக் கொண்டிருப்பது பணத்தை சம்பாதிப்பதற்காக தான். என்ன தான் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று கூறினாலும் கூட, பணம் இல்லை என்றாலும் வாழ்க்கை இல்லை என்பதை நாம் ஏற்று கொள்ளதான் வேண்டும்.

அந்த பணம் நம்மிடம் வருவதற்கு நாம் எத்தனையோ பாடுபட வேண்டி இருக்கிறது. ஆனால் பாடுபட்டு சம்பாதித்த பணம் எல்லோர் கையிலும் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்ற பதிலை உடனடியாகவே சொல்லி விடலாம்.

ஏனென்றால் பணம் சம்பாதித்தாலும் அது நம் கையில் தங்குவதற்கும் ஒரு சில யோகம் வேண்டும். சம்பாதித்த பணம் கையில் இருந்தால் தானே நாம் நிம்மதியாக வாழ முடியும் சம்பாதித்த பணம் கையில் இல்லை என்றால் நாம் அடுத்த செலவிற்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக தானே செய்கிறோம்.

இப்படி பணம் தங்காமல் நமக்கு வீண் விரயம் ஏற்பட்டு கடன் மேல் கடன் ஆவதற்கு தெரியாமல் நாம் பயன்படுத்தும் ஒரு சில பொருட்கள் தான் காரணம் அது என்னவென்று இந்த பதிவில் பார்ப்போம்.

பணம் கைக்கு வரும் போது அதை நாம் வைக்கும் முதல் இடம் நம்முடைய மணி பர்ஸ் தான் ஆண்கள் சம்பாதித்தாலும் சரி, பெண்கள் சம்பாதித்தாலும் சரி, பெண்கள் இப்போதெல்லாம் தனியாக ஹாண்ட் பேக் வைத்திருந்தாலும் அதற்குள்ளும் கட்டாயமாக பணம் இருக்கும் வீட்டில் பணம் வைப்பதற்கு என்று ஒரு இடம் இல்லாதவர்கள் கூட மணிபர்ஸ் வைத்திருக்க தான் செய்கிறார்கள். அந்த மணி பர்சில் நாம் வைக்கும் பணம் பல மடங்கு பெருக சில பொருட்கள் அதில் இருக்கக் கூடாது அது என்னென்ன என்பதை இப்போது அறிந்து கொள்ளலாம். முதலில் மணி பர்ஸ் கிழிந்து இருந்தால் அதை மாற்றி விடுங்கள். கிழிந்த பொருள் எப்போதும் நமக்கு தரித்திரத்தையே உண்டாக்கும்.

எல்லோருடைய மணிப்பர்ஸிலும் பணத்தை விட காகிதங்கள் அதிகமாக இருக்கும். ஏதாவது ஒன்று, இரண்டு முக்கியமான காகிதங்களை அதில் வைத்து கொள்ளலாம். ஆனால் தேவை இல்லாத சீட்டுகள் அதில் இருக்க கூடாது.

குறிப்பாக நகை அடமானம் வைத்து ரசிது, மாத்திரை சீட்டு, மாத்திரைகள், இதை எல்லாம் நாம் தனியாக ஓரிடத்தில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளலாமே தவிர எப்பொழுதும் மணிப்பர்ஸில் வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு வேளை இவை எல்லாம் உங்களிடம் எப்போது இருக்க வேண்டிய அவசியம் என்றால் தற்போது கைபேசியில் அதை படம் எடுத்து வைத்துக் கொள்ளும் சுலப முறை இருக்கிறது.

கூடுமான வரை இவையெல்லாம் நீங்கள் பத்திரமாக ஓரிடத்தில் வைத்து விட்டு, முக்கியமான ஆவணங்களை மட்டும் உங்கள் பர்சில் வைத்து கொள்ளுங்கள்.

ஒரு சிலர் ஏடிஎம், கார்டு கிரெடிட் கார்டு இது போன்றவைகள் எல்லாம் வைத்திருப்பார்கள். இதில் காலாவதியான அட்டையில் கண்டிப்பாக வைத்திருக்கக் கூடாது. நாட்கள் முடிந்து விட்ட பிறகு புதியது வாங்கி இருப்பீர்கள் பழையதை உடனடியாக எடுத்து விடுங்கள்.

பழைய கார்டுகள் தேவைப்பட்டால் இதையும் வேறு எங்காவது வைத்துக் கொள்ளுங்கள் பர்சில் வைக்கக்கூடாது. பெண்களுக்கும் அதே போல் அவர்களுடைய மணிப் பர்ஸில் எப்பொழுதும் அழகு சம்பந்தமான பொருட்களில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக இருக்கும்.

அதில் முக்கியமாக முடி குத்த பயன் படுத்தும் பின்,சேப்டி பின் போன்றவை இருக்கும். இரும்பு சம்பந்தப்பட்ட பொருளோ அல்லது கூர்மையான இவையெல்லாம் பணத்தை ஈர்க்கும் ஆற்றலை குறைக்கும் தன்மையுடையது.

எனவே இது போன்ற பொருட்களை நீங்கள் உங்கள் பரிசில் வைக்க வேண்டாம். வேண்டுமானால் இதை தனியாக ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொள்ளுங்கள். பர்சில் எந்த காரணம் கொண்டும் பணம், முக்கியமானவை தவிர அனாவசியமான எதையும் அதில் சேர்த்து வைக்க வேண்டாம். இவையெல்லாம் உங்கள் பணம் அநாவசிய செலவுக்கு ஆவதற்கு வழி வகுக்கும்.

Leave a Reply